கோவில்பட்டியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதற்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. முகாம் இன்றும்,நாளை(6-ம் தேதி)யும் நடக்கிறது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வதற்கான முகாமை தொடங்கி வைத்தார். மேலும், பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக காப்பீடு திட்ட அடையாள அட்டையை வழங்கினார்.

,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி பொறியாளர் சணல்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா, ராமர், தவமணி,சுரேஷ்,ஒன்றிய திமுக செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன்,ராதாகிருஷ்ணன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர்,பொதுக்குழு உறுப்பினர் சிவா,ரமேஷ்,செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன், மாரிச்சாமி,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,மகளிரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.









