• May 14, 2025

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்

 நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்

1980-களில் தொடங்கி இன்று வரை அனைவரின் மனதிலும்  நீங்கா இடத்தை பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’16 வயதினிலே’ படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திர நடிகராக அறிமுகமானார்.

இதன்பின் கவுண்டமணி தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். நடிகர் கவுண்டமணி, சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

கவுண்டமனியின் மாணவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள்  உள்ளனர். இந்நிலையில், கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.அவருக்கு வயது 67.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில், இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கவுண்டமணியுடன் நிறைய படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த செந்தில், செய்தி அறிந்து முதல் ஆளாக கவுண்டமணி வீட்டுக்கு வந்தார். கவுண்டமணி மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர் கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினர். மேலும் கவுண்டமணியுடனேயே இருந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *