மாரடைப்புக்கு வழிவகுக்கும் `மயோனைஸ்’-மறந்து விடுங்கள்
உணவே மருந்தாக இருந்த காலம் போய் உணவே உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவாக இன்று மாறிவருகிறது.
அந்த வகையில் இன்றைய இளைய தலைமுறையினரால் அதிகமாக ஈர்க்கப்பட்ட உணவுவகைகளுக்கு( தந்தூரி, ஷவர்மா சான்ட்விச் பர்கர் போன்ற அன்னிய நாட்டு உணவுகளுக்கு) சைடிஸ்ஸாக உள்ள மயோனனஸ், வயிற்றுவலி , வாந்தி போன்ற பல்வேறு உடல் உபாதைகள் எற்படுத்தக்கூடிய தாக உள்ளது..
பச்சை முட்டையின் மஞ்சள்கரு, எண்ணெய் மற்றும் வினிகர் அல்லது எலுமிச்சம்பழ சாறு கொண்டு தயாரிக்கபடுகிறது.முட்டையில் உள்ள புரதம் எண்ணெய் மற்றும் தண்ணீரும் குழம்பாக்கி ( இரண்டும் கலக்காத திரவத்தை இணைத்து நிலையான கலவை உருவாக்க படுகிறது.இது ஒரு GREAMY CONDINANT ஆக உள்ளது.மயோனனஸ் ஆயுட்காலம் வெறும்4 நாட்களே அவற்றை பிரிடஜில் வைத்து பயன்படுத்தினால் உடலுக்கு கேடு எற்படும்.
உணவு விடுதிகளில் சைடுடிஸ்ஸாக பயன்படுத்த க்கூடிய மயோனனைஸ் முதன்முதலாக கேரளா 2023 இல் முற்றிலுமாக பயன்படுத்த வதற்கு தடைவிதித்தது அதுபோல தெலுங்கானா அரசும் 2024 இல் தடை விதித்தது.
தமிழக அரசு இம்மாதம் ( ஏப்ரல் 8) தேதிமுதல் முற்றிலுமாக பயன்படுத்த ஓராண்டிற்கு தடை விதித்துள்ளது
பச்சை முட்டை யை மயோனைஸ் தயாரிப்பில் பயன்படுத்துவதால் சால் மோனெல்லா என்ற பாக்டீரியா மற்றும்.ஈகோலி போன்ற தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியாக்களால் நோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து உட்கொண்டால்,வாந்தி, வயிற்றுவலி மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தரவுகள் உள்ளன.அதிக எடை, ரத்த அழுத்தம் போன்ற வற்றால் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
எனவே உணவு விடுதிகளில் இதனை பயன்படுத்த தடைவிதித்து தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
அந்த அந்த நாடுகளுக்கேற்ற உணவு வகைகளை உட்கொள்ளுவோம் பாரம்பரிய உணவால் உடல் ஆரோக்கியம் எற்படும். எனவே மயோனைஸ் என்பதை மறந்து விடுங்கள்…!
அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.







