விவசாயிகளுக்கு உதவும் கிசான் இ- மித்ரா செயலி
கிசான் இ.மித்ரா ( KISSAN-E- MITRA ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ( ARTIFICIAL INTELLIGENCE) அடிப்படையிலான சாட்பாட், விவசாயிகளுக்கான சிறந்த தீர்வுகளை வழங்குகிறது.
இது விவசாயிகளுக்கான தொழில்நுட்ப உதவியுடன் இணைக்கும் ஓரு செயல்பாட்டு கருவியாக செயல்படுகிறது. ஆக இதுபோன்ற நடைமுறைகளை மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறைஇணை அமைச்சர் ராம் நாத் தாக்கூர் தெரிவித்து இருக்கிறார்.
விவசாயிகளுக்கு ஏற்படும் பயன்பாடு
1) பி.எம் கிசான் திட்டம் ( PM- KISSAN) நிதி உதவிக்கான விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
2) விவசாய திட்டங்கள்- பயிர்காப்பீடு (PMFBY) கிரெடிட் கார்டு (KCC) போன்ற திட்டங்களின் தகவல்கள் மற்றும் விண்ணப்ப செயல் முறைகள்.
3) மண் வளம் , காலநிலை மற்றும் பருவத்தை அடிப்படையிலான பயிர் பரிந்துரை
4) விவசாய வழிகாட்டுதல்.
பூச்சி மேலாண்மை , சந்தை விலை மற்றும் பாசன முறைகள்.
விவசாயிகள் எளிதாக பயன்படுத்த கூடிய தாகவும், பல்வேறு திட்டங்கள் மற்றும் நேரடியாக அணுகும் வரையிலும் வடிவமைக்க பட்டது.

காலநிலை மாற்றத்தால் விளைப் பொருட்கள் இழப்பை சமாளிக்க, தேசிய பூச்சி கண்காணிப்பு, பயிர் பிரச்சனைகளில் பூச்சி தாக்குதலைக் கண்டறிய AI மற்றும் இயந்திர கற்றலை பயன்படுத்த படுகிறது.
நெல் மற்றும் கோதுமை பயிர்களுக்கான செயற்கை கோள், வானிலை மற்றும் மண் ஈரப்பத தரவுத் தொகுப்பை களை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பகுப்பாய்வு மற்றும் பயிர் சுகாதார கண்காணிப்பு மேற்கொள்ள உதவுகிறது.
இந்த சாட்பாட் விவசாயிகளின் கேள்விகளுக்குஅவர்களது தாய் மொழியில் உடனடியாக பதில்கள் வழங்க வகையில் வடிவமைக்க பட்டுள்ளது.
வேறென்ன பயன்பாடுகள்?
11மண்டல மொழிகளில் , தமிழ் இந்தி ஆங்கிலம் மளையாளம் கன்னடம், பெங்காலி, தெலுங்கு மாரத்தி ஓடியா, பஞ்சாபி மற்றும் குஜராத்யில் தற்போது இச்சேவை வழங்க படுகிறது
எப்படி இதனை உபயோகிப்பது?
விவசாயிகள் தங்களுடைய அலைபேசியில் உள்ள கூகிள் பிளே” ஸ்டோரில் இருந்து , கிசான்- இ- மித்ரா செயலியை( APP) பதிவிறக்கம் செய்யவேண்டும்.சாட்பாட்டில்( CHATBOT.AI ) கேள்விகளைப் பதிவிட்டு உடனடியாக பதில்களை பெறலாம்.
விரைவில் பிற மாநில மொழிகளில் விரிவுபடுத்த பட உள்ளது.

கீசான்- இ – மித்ரா விவசாயிகளுக்கு நேரம் மற்றும் செலவுகளை மிச்சப்படுத்தி , விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளமாக விளங்குகிறது.
விவசாயிகளுக்கு பயனுள்ள தீர்வுகளை தருவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு திட்டங்களைப் பற்றிய முழுமையான விளக்கத்தை யும் வழங்கிறது இந்த சாட்பாட் இ.மித்ரா.
அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை








