குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் எது…?

நம்முடைய முன்னோர்கள் கிணற்றுநீர் குளத்து நீரை பருகி வந்தனர். காலப்போக்கில் அவைமாறி குழாய் நீர், போர்வெல் நீரை பருகத் தொடங்கி விட்டோம்.
இன்றைய கால கட்டத்தில R.O நீரை குடிப்பதை கவுரவமாக நினைத்து , செம்புல தண்ணிய குடித்து பழகிய வந்த நாம் இன்று பாட்டில் நீரை பருகி வருகிறோம்.
இதில் எது சிறந்தது? நீரின் தரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்..மனித உடல் சுமார் 60-70% தண்ணீரால் ஆனது. மனித உடலின் செயல் பாட்டில் தண்ணிர் முக்கிய பங்கு வகிக்கிறது.அதனால் தான் நாம் எந்த வகையான தண்ணீரைக் குடிக்கிறோம் என்பது முக்கிய மானது..
ஒரு காலத்தில் எக்னாமிக்ஸ் பாடத்தில் படிக்கும் போது தண்ணீர் இலவசமாக இருந்தது காலப்போக்கில் இன்று விலை உயர்ந்த பொருளாக மாறிவிட்டது .இனிமேல் தண்ணீரை சேமிக்க விட்டால் அது வருங்காலத்திலே அரிய பொருளாக மாறி விடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கின்றனர்.
தண்ணீர் என்பது திட திரவ வாயு நிலையில் மாறக்கூடிய பொருள் .
நீரின்றி நாம் உயிர் வாழ முடியாது. தண்ணீர் என்பது H2O
தண்ணீரில் 2 ஹைட்ரஜன் மூலக்கூறு களாலும் ஆக்சிஜன் மூலக்கூறு களாலும் ஆனது. இதுபோன்ற லட்சக்கணக்கான மூலக்கூறுகளால் ஒன்றிணைந்து ஓரு துளிநீரை உருவாக்கின்றன.
பூமி 71% தண்ணீரால் சூழ்ந்துள்ளது. இதில் 96.5% கடலில் உள்ளது .குடிப்பதற்கு தகுந்த நீர் 1% மட்டுமே பூமியில் உள்ளதென தரவுகள் கூறுகின்றன.
குடிநீரில் PH ( பி .எச்) உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய தர நிர்ணய ஆய்வகத்தின் படி 6.5முதல் 8.5க்குள் இருக்க வேண்டும்..
TDS என்பது TOTAL DISSOLVED SOLID)
தண்ணீரில் இருக்கும் டிடி எஸ் எனப்படும் மொத்த கரைந்த திடப் பொருள் ஓரு லிட்டருக்கு 500மில்லி கிராமிற்கு மேலோ , 100மில்லி கிராமிற்கு கீழோ இருக்க கூடாது என BIS தர நிர்ணயம் பரிந்துரைத்துள்ளது.
தண்ணீரின் டிடிஎஸ் 100க்கு கீழ் இருந்தால் அதில் உடலுக்கு தேவையான உப்புகள் இல்லை என்று பொருள்.
தண்ணீரின் டிடிஎஸ் 500.க்கு மேல் இருந்தால் அந்த நீர் கடின நீராகும் (அந்த தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததானது அல்ல.
ஒரு லிட்டர் தண்ணீரில் இருக்க வேண்டிய உப்புகள் அளவு:
1) பைகார்பனேட் – 200மி.கி
2) கால்சியம்- 200மி.கி
3) சல்பேட் ,- 200மி.கி
4) புளுரோரைடு – 200மி.கி
5) மெக்னீசியம்- 30மி.கி
6) நைட்ரேட்- 45மி.கி
7) ஆர்சனிக் – 0.01%
இன்னும் பல உலோகங்கள் உள்ளதாக BISதர நிர்ணயம் தெரிவிக்கின்றன.
தண்ணீரின் வகைகள் ( சாதக, பாதகங்கள் )
குழாய் நீர் ( TAPE WATER)
ஏரிகள் ஆறுகள் முலம் குடிநீர் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு அதில் குளோரினேற்றம் செய்து வீடுகளுக்கு தெரு குழாய்கள் முலமாக குடிநீர் அந்த அந்த பஞ்சாயத்துகள் முலமாக வினியோகம செய்யப்படுகிறது.
இந்த முறையில் பாக்டீரியா , வைரஸ் முழுமையாக அழிக்கப்படுவதில்லை இதனை பருகுவது உடல்நலத்திற்கு உகந்த தல்ல தொற்றுகள் பரவக்கூடும்.
2).ஆறு கிணறு ஆழ்துளை நீர் ( போர்வெல் நீர்).
தற்போது ஆறுகள் கிணறுகள் வறண்ட நிலையில் பூமியில் போர்வெல் முலமாக தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்த படுகின்றன.
இதில் பாக்டீரியர மற்றும் உப்புகளும் ரசாயனங்களும் உள்ளது.இதுவும் குடிப்பதற்காக உகந்த தாக இல்லை.
3)R.Oமூலமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.
R.Oஎன்பது REVERSE OSMOSIS) இந்த செயல் முறையில் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியா , வைரஸ் பூஞ்சானங்கள் மற்றும் நச்சுகள் அழைக்கப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில உப்புகள் போன்ற ஊட்டச்சத்துகளும் தண்ணீரில் இருந்து நீக்கப்படுகின்றன.
ஆக்டிவேட் கார்பன் என்ற செயல் முறைகளால் தண்ணிரில் இருக்கும் ரசாயன ங்கள் நீக்கபடுவதால் தண்ணீரின் நிறம் மற்றும் சுவை பாதிக்கபடும்.மாசுகள் ஆக்டிவேட் கார்பன் மூலமாக வடிகட்டப்பட்டு நீக்கினாலும் மைக்ரோ பாக்டீரியா நீக்கபடுவது இல்லை.
எந்த நீராக இருந்தாலும் காய்ச்சி கொதிக்கவைத்து ஆறிய பின்னர் குடிப்பது தான் சிறந்ததாகும்.
தண்ணீர் முலமாக பரவும் தொற்று நோய்களை தடுக்க கொதிக்க வைத்த அதாவது 100டிகிரிக்கு மேல் வெப்ப நிலையில் கொதிக்க வைத்த நீரை பருக வேண்டும்..
தண்ணீரில் அதுவும் நிலத்தடி நீரில் ஏகப்பட்ட ரசாயன உரங்களை போடுவதால் ( நைட்டிரேட் , யுரேனியம் மாசுகள் ) அதிகமாக உள்ளது படிப்படியாக ரசாயன உரங்களை குறைத்து இயற்கையான உரங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான குடிநீரை குடிப்போம்.
அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.
