ஈக்விடாஸ் வங்கி சார்பில் மகளிர் தினவிழா

கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள ஈக்விடாஸ் வங்கி சார்பில் மகளிர்தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வங்கியின் வர்த்தக மேம்பாட்டு மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர்கள் பழனி கணேஷ், விண்ணரசன், விஜய் கருப்பசாமி ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணியில் இருந்த செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் சொர்ணா நர்சிங் இன்ஸ்டிடியூட் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும் பெண்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் வங்கியின் சேமிப்பு திட்டம் பற்றிய விவரங்கள் அடங்கிய நோட்டீஸ்களையும் விநியோகம் செய்தனர்.

