கோவில்பட்டியில் தவெக சார்பில் மகளிர் தின நலத்திட்ட உதவிகள்


தமிழக வெற்றிக்கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைமை நிர்வாகி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார் மாவட்ட நிர்வாகிகள் சத்யா சுரேஷ், ஜான்சி கண்ணன்,கோவில்பட்டி ஒன்றிய நிர்வாகி அய்யம்மாள் ஆகியோர் முன்னில வகித்தனர்
.மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் முனைவர் சம்பத்குமார் சிறப்புரை ஆற்றினார். கோவில்பட்டி மத்திய ஒன்றிய நிர்வாகி முத்து ரவி,நகர தொழில்நுட்ப அணி ராகுல்,கழக நிர்வாகி வீரபாண்டி மகேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மகளிர் தின உறுதிமொழியை மாவட்ட நிர்வாகி சித்ரா செல்வராஜன் வாசித்தார்,மாவட்ட நிர்வாகி கவுதமி வரவேற்று பேசினார். .
மகளிர் தின விழா கருத்தரங்கத்தை தொடர்ந்து , 600 பயனாளர்களுக்கு சேலை, அரிசிப்பை வழங்கப்பட்டது.
விழாவில் எபனேசர்,செந்தில்குமார்,வினோத் கண்ணன்,மதன்ராஜா,சுரேஷ் சத்யா,வழக்கறிஞர் சண்முகராஜா, கூடலிங்கம், முனீஸ்வரன், மகேஷ்குமார்,பொன்காசிராம்,செண்பகக்கனி,அருண்,கண்ணன்சிவா, கிருஷ்ணசாமி, ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரசாத்,கோவில்பட்டி மத்திய ஒன்றிய நிர்வாகிகள் வழக்கறிஞர் பார்த்திபன்,ராஜதுரை,ஜெனிபர் தங்கதுரை ஆகியோர் செய்திருந்தனர். நகர நிர்வாகி ஆனந்தலட்சுமி நன்றி கூறினார். சுதா லூர்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
