கோவில்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியைக்கு `பாரதி கண்ட புதுமைப்பெண்’ விருது

நாடு முழுவதும் மார்ச் 8ம் தேதி மகளிருக்கு சம உரிமை வழங்கிடவும், மகளிரின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றவும் சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி நேற்று கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் கோகிலா அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதாவிற்கு `பாரதி கண்ட புதுமைப்பெண்’ விருது மற்றும் பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
விருது பெற்ற தலைமையாசிரியை ஜெயலதா ஏற்புரை வழங்கினார், விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் பிரேமலதா, செல்வம், ரமேஷ், ஆனந்தகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி பேராசிரியை ஸ்ருதி நன்றி கூறினார்.
