• March 6, 2026

கோவில்பட்டியில் தியாகி சங்கரலிங்கனார் பிறந்தநாள் விழா

 கோவில்பட்டியில் தியாகி சங்கரலிங்கனார் பிறந்தநாள் விழா

சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கலிங்கனார் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்விற்கு பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் சீனிராஜ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் கருப்பசாமி,நிர்வாகி நல்லையா,நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார்,

திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் அமலி பிரகாஷ், காங்கிரஸ் நகர கமிட்டி தலைவர் அருண்பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ்,காங்கிரஸ் மாவட்ட செயலாளர் துரைராஜ்,ஐஎன்டியு சி ராஜசேகரன்,மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துக்குமார், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் பொன்னுத்துரை, தொழிலதிபர் மோகன் மற்றும் பாண்டியனார் மக்கள் இயக்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

__________

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *