• May 19, 2024

மகள் பவதாரணி உடலை பார்த்து கதறி அழுத இளையராஜா

 மகள் பவதாரணி உடலை பார்த்து கதறி அழுத இளையராஜா

இசை அமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி. கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள ஆயுர்வேத மையத்தில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் பவதாரணி உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டு நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47.

மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த மகள் பவதாரணி உடலை பார்த்து இளையராஜா கதறி அழுதார். தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பு மருத்துவமனைக்கு பவதாரணி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வுக்கு பிறகு குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

பவதாரணி உடலை தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. சென்னையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன்பிறகு இறுதி சடங்குகள் நடைபெறும்.

மரணம் அடைந்த பவதாரணி, தந்தை இளையராஜா, சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்ககர் ராஜா ஆகியோருடன் இணைந்து பயணம் செய்து வந்தார்,  பின்னணி பாடகி ஆவார். இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் மஸ்தானா…மஸ்தானா… பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். பாரதி படத்தில் மயில் போல, ராமர் அப்துல்லா படத்தில் என்வீட்டு ஜன்னல் உள்ளிட்ட பல பாடங்களை பாடியுள்ளார். பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல’ பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பின் 3 திரைப்படங்களுக்கு பவதாரிணி இசையமைத்து வந்தார்.. ரேவதி இயக்கத்தில் ஷோபனா நடித்த மித்ர் மை ப்ரெண்ட் படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *