ஐகோர்ட்டு தீர்ப்பு: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஒ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் நீக்கப்பட்டதும் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.
இந்த ஐந்தே தீர்ப்பை வரவேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி/.ஜெயக்குமார் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் , கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள்,மாவட்ட கழக செயலாளர் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதேபோல அதிமுக அலுவலகத்திற்கு வந்த தொண்டர்களுக்கு அதிமுக நிர்வாகி ஒருவர் அனைவருக்கும் இளநீர் கொடுத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது :=,:-உண்மை, நீதி, நியாயத்திற்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு கொடுத்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவருடன் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இனியாவது வெட்கம், ரோஷம் இருந்தால் அதிமுகவின் கறை வேட்டியை ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி பயன்படுத்தக் கூடாது என்றும் அதேபோல கட்சியின் சின்னம் கட்சியின் கொடி கட்சியின் பெயர் ஆகியவற்றையும் பயன்படுத்தக் கூடாது.
மாநாடே எங்களுக்கு பெரிய வெற்றி கொடுத்த சூழ்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு ஒற்றை தலைமை அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவதற்கு ஏதுவாக வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு சென்றாலும், இன்று வந்த தீர்ப்பு போலவே உச்சநீதிமன்றமும் அதே தீர்ப்பையும் கொடுக்கும்.
நீட் விவகாரத்தில் திமுகவை நம்பி அதிமுக எப்படி போராடும் எங்களுக்கு ரகசியம் தெரியும் என்று சொல்லிவிட்டு தற்போது எங்களுடன் வந்து போராடுங்கள் என்று சொல்வது நியாயமா அதிமுகவை பொருத்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பதே நிலைப்பாடு ஆனால் திமுக இதில் மக்களை ஏமாற்றி வருகிறது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கும் நாங்கள் எதற்கு பயப்பட போகிறோம் கனகராஜன் சகோதரர் யாரோட தூண்டுதலிலோ இப்படி பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை சிபிஐ விசாரணை தேவை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.
