• May 20, 2024

பா.ஜ.க.உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை

 பா.ஜ.க.உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை

கோவில்பட்டி சட்டமன்ற சக்தி கேந்திர பொறுப்பாளர் அம்மன் மாரிமுத்து ,கோவில்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மாடசாமி, சந்தானம் , வினோத்குமார், விஜயலட்சுமி ஆகியோரை நேரில் சந்தித்து வினோத் குமார் பூத்தில் பா.ஜ.க .ஓட்டு கள் எவ்வாறு உள்ளன என்பதை ஆய்வு செய்தார்.

உறுப்பினர் சேர்கை படிவங்களை அவர்களுக்கு வழங்கி ஆலோசனை நடத்தப்பட்டது. ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் காளிராஜ் நிர்வாகிகள் நாராயணசாமி, கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மேலும் உட்பட்ட தெற்குத் திட்டங்குளம்சக்தி கேந்திர பொறுப்பாளர் பெருமாளை அம்மன் மாரிமுத்து சந்தித்து சக்தி கேந்திரம் படிவம் பூர்த்தி செய்ததை பார்வையிட்டு விவரங்களை தெரிந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். பா.ஜ.க. உறுப்பினர்கள் நிறைய பேரை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆலோசனை வழங்கினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *