அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டப்படி தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கும்படி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளித்திருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி 4 பேருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் […]
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் விவாதிக்க டெல்லி சென்றுள்ள முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்… நேற்று கர்நாடக பவனில் சட்டநிபுணர்கள், வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்…. காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்ட காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டதால், கர்நாடகம் எடுக்க வேண்டிய .. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தங்களிடம் போதிய அளவு நீர்… இல்லாததால் காவிரி ஒழுங்காற்று உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது… . இதுகுறித்து டி.கே.சிவக்குமார் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் (25) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (26) மற்றும் மதன் (24) ஆகியோரால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக சதீஷ் மற்றும் மதன் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட பி.சி.ஆர். (PCR) நீதிமன்றத்தில் நடைபெற்று […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ரூ.100 கோடி மதிப்பிலான தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் 1.35 ஏக்கர் நிலம், ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 1980-ம் ஆண்டில் நில உரிமையாளர் குப்புசாமி மணியக்காரர் குடும்பத்தார்கள், சிபிசிஐடி அலுவலகத்தில் மூலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து, 2 வாரங்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்ற விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 6-ந்தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய […]
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுத்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தூத்துக்குடி நீதிமன்றம் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கோவில்பட்டியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கான மை ரோட்டரி இணையதள பயிற்சி ஆசியாபார்ம்ஸ் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகள், சங்க உறுப்பினர்களின் விவரங்கள்,சேவை திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பன்னாட்டு ரோட்டரியின் மை ரோட்டரி இணையதளத்தில் மொபைல் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்தும் இணையதளத்தை முறையாக கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார்,.ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் முத்து […]
கோவில்பட்டி காளியம்மன் கோவில் ஆடிப்பொங்கல் திருவிழா ஆகஸ்டு 2 -ந் தேதி தொடங்கி 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது,.2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மாக்காப்பு அலங்கார சிறப்பு தீபாராதனை நடக்கிறது.. இரவு 7 மணிக்கு ஆடி எனும் தேவமங்கை என்ற தலைப்பில் தேவி பக்தி சொற்பொழிவு ஆற்றுகிறார்.;. 3-ந் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு அம்மனுக்கு சந்த்தன அலங்கார சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அம்மையும், அப்பனும் என்ற தலைப்பில் […]
கவர்னர் பங்கேற்ற நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன், 2 எம்.எல்.ஏ.க்கள்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு… விருந்தினராக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார். இந்த விழாவில் மொத்தம் 37 ஆயிரத்து 877 பேர் பட்டம் பெற உள்ளதாகவும், கவர்னர் அர்லேகர் நேரடியாக 871 பேருக்குப் பட்டங்களை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் பட்டமளிப்பு விழாவில் 871 பேருக்கு நேரடியாகப் பட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம் பதக்கம் பெறும் 113 பேருக்கு மட்டுமே… கவர்னர் நேரடியாகப் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியலில் முழு கவனம் செலுத்தும் வகையில், அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’,.. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கடந்த 23-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியீட்டுக்கு முன்பும், வெளியான பிறகும் பல்வேறு சவால்களை சந்தித்த ‘ஜனநாயகன்’, திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே சட்டவிரோதமாக… இணையத்தில் கசிந்தது. இருப்பினும், இதுவரை படம் ரூ.250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக […]
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி மேகதாது அணை குறித்து எழுத்துப் பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார். அதாவது ‘காவிரி நீர் தொடர்பான பிரச்சினை குறித்து கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி..மாதம் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகா, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு,… தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? மேலும் முன்மொழியப்பட்டுள்ள மேகதாது […]







