முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது :- கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவதுகீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக்கருத்தியலை […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 23 ம் தேதி கோவில் பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் […]
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி நேர்காணல்;
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கான எழுத்து தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மாவட்ட அளவில் நடத்தப்படும் நேர்முகத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான கட்டணமில்லா மாதிரி நேர்முகத் தேர்வு (Mock Interview) தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை 21.11.25 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ள […]
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன்கார்டுகள் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி மூவேந்தர் மருதம் முன்னேற்றம் கழகம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமையில், மாநில பொறுப்பாளர் பொன்னுச்சாமி, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, தென்மண்டல மகளிர் அணிச் செயலாளர் சுப்புலட்சுமி, மாநில இளைஞரணி செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கோவில்பட்டியில் ரேஷன்கார்டுகள் வழங்குவதற்கு லஞ்சம் கேட்பதாக கூறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் […]
கோவில்பட்டி பயணியர் விடுதி அருகே தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மாநில தலைவர் ஓ.எ.நாராயணசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநில பொருளாளர் சுப்புராஜ் மாவட்ட தலைவர்கள் நடராஜன் வெள்ளத்துரை பாண்டி செங்கோட்டை வேலுச்சாமி அவைத்தலைவர் வெங்கடசாமி தென்காசி மாவட்ட […]
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் நவதீகிருஷ்ணன், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டத் தலைவர் செந்தில்குமரன், தமிழக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தைச் […]
திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்் தேதி வரை செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக இந்த ரெயில் செல்லாது. கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், குற்றாலம் வந்து அருவிகளில் நீராடி விட்டு செல்வதால் […]
கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்தும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும். அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது எனலாம். ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், […]
கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு படத்திறப்பு நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது; முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் தொண்டுகள் செய்து, அரசியலில் இருந்த மூத்தவர்களிடமும், மூத்த கட்சிகளிடமும் அறிவுரை பெற்றுக் கொண்டு கட்சி தொடங்கி இருக்கிறேன். இதில் மாற்றுக்கருத்து இருந்தே ஆக வேண்டும். அதற்கு பெயர்தான் ஜனநாயகம். ஆனால் நாடு என்று வரும்போது கூடி நின்றாக வேண்டும். ரிமோட்டை தூக்கிப்போட்டீர்களே.. […]







