‘டிட்வா’ புயல் இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதாவது, காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 400 கி.மீ. தொலைவிலும் தற்போது மையம் கொண்டுள்ளது. ‘டிட்வா’ புயல் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கில் நகர்ந்து நாளை (நவ.30) காலை வட தமிழ்நாட்டை நெருங்கும் என்று […]
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் ‘டிட்வா’ புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று (சனிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 22 […]
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் டெல்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, அகமதாபாத் தேசிய புத்தாக்க நிறுவனம், சென்னை அறிவியல் தொழில்நுட்ப மையம், ஆகியவை இணைந்து மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளை இன்று நடத்தின. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில் தொடக்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார். புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நாளையும் நடக்கின்றன. மாநிலம் […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பில் ரூ.1000 கோடி மதிப்புள்ள 7 ஆண்டுக்காலப் பிணையப் பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 10 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம் மற்றும் ரூ.1000 கோடி மதிப்புள்ள 30 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம் ஏலத்தின் மூலம விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் டிசம்பர் 02, 2025 […]
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நான் பெரிதும் மதிக்கக் கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து தவெகவில் இணைந்துள்ளார். அதனால் ஒரு கருத்துதான் சொல்ல முடியும்.எங்கிருந்தாலும் வாழ்க.. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் ஜெயக்குமாரும் செல்கிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. எனக்கு எப்போதும் ஒரே கட்சி தான்.. நேற்று, இன்று, நாளை.. ஏன் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன். யார் வீட்டின் முன்பாகவும் […]
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் பட்டமளிப்பு விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. நடிகர் சிவக்குமார், ஓவியர் குருசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- உங்களை ‘மாணவர்கள்’ என்று அழைப்பதை விட, பட்டம் பெற்ற ‘கலைஞர்கள்’ என அழைப்பதே பொருத்தமானது. அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். குறிப்பாக அதிகமான பெண்கள் பட்டம் பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி […]
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இந்த புயலுக்கு ‘டிட்வா’ என பெயரிடப்பட்டு உள்ளது. ஏமன் நாடு இந்த பெயரை பரிந்துரைத்து இருக்கிறது. டிட்வா புயல் தற்போது சென்னைக்கு 530 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருக்கிறது. […]
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி பொட்டியம்மாள். இவர்களுடைய இளைய மகன் மகாலிங்கம் (வயது 30). இவர், கடந்த 2022-ம் ஆண்டில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் ராஜபாளையம் பட்டாலியனில், போலீஸ்காரராக சேர்ந்தார். தற்போது மதுரை ஆயுதப்படையில் பணியாற்றினார். மதுரை ஐகோர்ட்டில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மகாலிங்கம் உள்ளிட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஐகோர்ட்டு பிரதான வாசல் பகுதியில் எஸ்.எல்.ஆர். வகை துப்பாக்கிகளை ஏந்தி […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தங்கத்தகடுகளை தாமிர தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம் […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- அதிமுகவில் புரட்சி தலைவரால் அடையாளம் காணப்பட்டவன் நான். அதிமுக உருவான போது எம்ஜிஆர் உடன் சென்றவன் நான். புரட்சி தலைவி ஜெயலலிதாவின் பாராட்டையும் பெற்றவன் . அதிமுக மீண்டும் ஒன்றனைய வேண்டும் என்று வலியுறுத்தினோம் . அது நடக்கவில்லை. என்னை திட்டமிட்டு வெளியேற்றியவர் எடப்பாடி பழனிசாமி. நான் தவெகவில் இணைந்ததற்கு காரணம் […]







