பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்; போலீஸ் சூப்பிரண்டிடம் 34 பேர் மனு .
தமிழக அரசு உத்தரவுப்படி இரு வாரங்களுக்கு ஒருமுறை முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இம்மாதத்தின் முதல் புதன் கிழமையான இன்று (6.7.2022) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் 34 பேர் தங்கள் குறைகளை போலீஸ் சூப்பிரண்டு எல். பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.