கோவில்பட்டி, கல்லூரியில் விளையாட்டு விழா
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் பா.உமாதேவி மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் (பொ) பா.மகேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தன்ர்,.
தேசிய மாணவர் படை மற்றும் மாணவர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் ,தேசியக்கொடி ஏற்றினார்., முதல்வர் மூ.சுப்புலெட்சுமி கல்லூரிக் கொடி, வேதியியல் துறைத்தலைவர் பா.உமாதேவி ஒலிம்பிக் கொடி ஏற்றினர்.

தொடர்ந்து தென்னிந்திய அளவில் பல்கலைக்கழகத்திற்கு இடையே நடைபெற்ற ஆக்கிப் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை கணிதவியல் துறையின் மூன்றாமாண்டு மாணவி க.மாரிச்சித்ரா ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி வைத்தார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன,
விளையாட்டு விழா ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் தி.கோதையம்மாள், சுயநிதிப்பாடப் பிரிவுகள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்.அ.குமரேசன் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.







