ஆக்கி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி, தூத்துக்குடியில் ஆக்கிப்போட்டிகள்; 62 அணிகள் பங்கேற்பு

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக இந்திய ஆக்கி நூற்றாண்டு விழா கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்றது.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி , ஜான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி, வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,தூத்துக்குடி தருவை மைதானம், ஹோலி கிராஸ் கல்லூரி மைதானம், விளாத்திகுளம் அம்பாள் பள்ளி , சிகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மைதானங்களில் ஆக்கி போட்டிகள் நடைபெற்றன
மொத்தம் 62 அணிகள் கலந்து கொண்டு விளையாடின கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசியக்கொடி மற்றும் ஆக்கி மட்டைகளை ஏந்தி நடனமாடி கொண்டாடினர்

விழாவுக்கு பள்ளியின் தாளாளர் நாகமுத்து தலைமை தாங்கினார் முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி ஜெயரத்தின ராஜ் சிறப்பு விளையாட்டு விடுதி ஆக்கி பயிற்சியாளர்கள் முத்துக்குமார் ஹானஸ்ட் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளியின் முதல்வர் பொற்கமலம். துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மற்றும் வேல்ஸ் வித்யாலயா பள்ளியும் இணைந்து நடத்திய நூற்றாண்டு விழாவின் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட ஆக்கி போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி மேற்பார்வையில் குழுவினர் செயுது இருந்தனர்.

இந்த குழுவில் பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா வேல்ஸ் வித்யாலயா பள்ளி உடற்கல்வி இயக்குனர் சுரேந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ் குமார் , சிவானந்த, கிருஷ்ணமூர்த்தி, முருகன், திருச்செல்வம், வேல்முருகன், பாலசிங் , முகேஸ்வரி, ஈஸ்டர் , ரவி செல்வம், மூத்த ஆக்கி வீரர்கள் புகழேந்தி, பொன்ராஜ், சுரேஷ்குமார், சண்முகப்பிரியா, ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.







