பிரதமரிடம், எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய கோரிக்கைகள்
துாத்துக்குடியில் விரிவுபடுத்தப்பட்ட விமானநிலைய திறப்பு விழாவை முடித்துக் கொண்டு, நேற்று இரவு, 10:20 மணிக்கு திருச்சி வந்த பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். பிரதமரிடம் நலம் விசாரித்த அவர், தனது பிரசார பயணம் குறித்து விளக்கினார்.

அப்போது மோடியிடம், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விபரம் பின்வருமாறு:-
* கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

* தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்
மேற்கண்ட மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.







