கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு `வீல் சேர்’ நன்கொடை

கோவில்பட்டி நாடார் ஜவுளி ரெடிமேட் வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம் சார்பில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வீல் சேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொது நல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கோவில்பட்டி ரெயில் நிலைய மேலாளர் ரவிக்குமார் , வெயில் முத்து ஆகியோரிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை கோட்டம் முன்னாள் ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சேதுரத்தினம், மாவட்ட உறுப்பினர் மாரிசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் பாரதி , நந்தகுமார், சரவணன், மதிவாணன்,அய்யாதுரை, சீனிவாசன், சுரேஷ், ராஜசேகர், மதன்மோகன், பொற்ச்செழியன், சுரேஷ் , ஜெயபால், கோவில்பட்டி பயணிகள் கமிட்டி உறுப்பினர் தங்க திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
