கீழஈராலில் தேமுதிக பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் கீழஈராலில் விஜயகாந்த் ரசிகர் மன்ற கொடியை அறிமுகம் செய்து அதையே கட்சி கொடியாக்கி 25 ம் ஆண்டு வெள்ளி விழா வை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுசெயலாளர் பிரேமலதா பொதுக்கூட்டம் நடத்த அறிவித்ததன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்குமாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
கூட்டம் தொடங்கும் முன் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மாரியாதை செய்யப்பட்டது மாநில தேர்தல் பிரிவு செயலாளர் தாமேதரகண்ணண் கட்சியின்கொள்கை மற்றும் கொடியை விளக்கி பேசினார்
இக்கூட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ் சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். மாவட்டஅவைதலைவர் கொம்பையாபாண்டியன், பொருளாளர் ராஜன், துணைசெயலாளர் ராஜபாண்டி, செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், பொதுகுழுஉறுப்பினர் முருகன், காளிதாஸ், ஒன்றியசெயலாளர்கள் விளாத்திகுளம் கிழக்கு தங்கச்சாமி, மேற்கு மாரியப்பன், புதூர் மேற்கு ஆறுமுகபெருமாள், கயத்தார் மேற்கு நடராஜன், கயத்தார் கிழக்குஅருண், ஓட்டபிடாரம் ஜெயக்குமார் ,நகரசெயலாளர் கோவில்பட்டி நேதாஜிபாலமுருகன், மாவட்டகேப்டன் மன்ற செயலாளர் முத்துமாலை உள்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் ஒன்றியதுணைசெயலாளர் நாராயணண் நன்றி கூறினார்
