ஸ்மார்ட் மீட்டர் பாதிப்பு குறித்து மக்கள் சந்திப்பு இயக்க பிரசார கூட்டம்; கோவில்பட்டியில் நடந்தது

தமிழ்நாட்டில் வீடுகளில் இருக்கும் மின் மீட்டரை மாற்றி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு மின் துறை பொறியாளர் அமைப்பு ,இந்திய தொழிற்சங்க மையம் கோவில்பட்டி கோட்டம் ஆகிய அமைப்புகள் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
இதில் மத்திய, மாநில அரசுகளின் மின்சாரத் திருத்த சட்ட மசோதா, உதயமின் திட்டம் ஆகியவற்றின் மூலம் தற்போதைய இருக்கும் மின் அளவீட்டு முறையை மாற்றி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான 100 யூனிட் வரையிலான இலவசம் மின்சாரம், விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் ஆகியவை நிறுத்தப்படும். மேலும் ஸ்மார்ட் மீட்டரில் ப்ரீபெய்டு முறை கட்டணம் வசூலிக்கப்படும் இதனால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்த முடியாது. என்று பிரசார கூட்டத்தில் பேசப்பட்டது.
இந்த மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு கோட்டச் செயலாளர் வெங்கிட கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில் வேல் முன்னிலை வகித்தார். கோட்டத் தலைவர் விஜயராகவன் வரவேற்புரை ஆற்றினார்.
மாநில பொதுச்செயலாளர் அருள்செல்வன், மண்டல செயலாளர் அப்பாதுரை, மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், திட்டச் செயலாளர் குன்னி மலையான் , சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சீனிவாசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காண்ட்ராக்ட், அவுட் சோர்சிங் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது,..
இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் முத்துசாமி, முத்துக்காந்தாரி மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சித்ராதேவி, வாலிபர் சங்க நிர்வாகிகள் இசக்கி,குரு உட்பட பலர் கலந்து கொண்டனர். மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு நிர்வாகி பெருமாள் நன்றி கூறினார்.
