மாதவராஜ் -“கிளிக்” நாவல் ஆய்வரங்கம், முருகேஸ்வரி- “ம்மா” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் கோவில்பட்டி கிளை சார்பில் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 10 வது நிகழ்வாக எழுத்தாளர் மாதவராஜ் எழுதிய “கிளிக்” நாவல் குறித்து ஆய்வரங்கம் நடைபெற்றது.
பள்ளி சிறுவர் ,சிறுமியர்களின் பாடல் ,நடனம், கவிதை, காடுகள் பாதுகாப்பு குறித்தான நாடகம் என தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு ., கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமை தாங்கினார் . கிளை இணைச் செயலாளர் முத்துராஜ் வரவேற்புரை ஆற்றினார். கிளைச் செயலாளர் வேலுச்சாமி துவக்க உரையாற்றினார்.
நாவல் குறித்தான விமர்சனத்தில் கவிஞர் ஜெகநாதன், கவிஞர் முருகேஸ்வரி, மருத்துவர் கருப்பசாமி, ஜெயக்குமார், ரம்யா, பிரேமா, மைக்கேல் ஸ்டெமி ஆகியோர் பங்கெடுத்தனர். ஏற்புரையாக நூலாசிரியர் மாதவராஜ் உரையாற்றினார்.
தொடர்ந்து, கவிஞர் முருகேஸ்வரி எழுதிய “ம்மா” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சாகித்ய பாலபுரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் பேசினார். ஆசிரியர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.
