• May 21, 2025

இலங்கைக்கு கடத்த திட்டம்: தூத்துக்குடி, ஆத்தூரில்  ரூ.1கோடி பீடி இலைகள் சிக்கின- ஒருவர் கைது   

 இலங்கைக்கு கடத்த திட்டம்: தூத்துக்குடி, ஆத்தூரில்  ரூ.1கோடி பீடி இலைகள் சிக்கின- ஒருவர் கைது   

தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 29 மூட்டை பீடி  இலைகள் (கட்டிங் இலை)30 கிலோ எடை கொண்ட 14 மூட்டை பீடி  1200கிலோ கைப்பற்றபட்டது. 

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு , கடத்தல் பொருட்களை படகில் ஏற்றி கொண்டிருந்த இனிகோநகர் ப்ளோரன்ஸ் மகன் ராபின்சன் (25), என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் கைப்பற்றபட்டது. கைப்பற்ற பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும்.

இதுபோல் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே ஜெய ராமசந்திரபுரம், தாமிரபரணி ஆற்றின் கிழக்குக் பகுதியில் கியூ பிரிவு போலீசார் ரோந்து சென்றபோது இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 60 மூட்டை பீடி இலைகள் சுமார் 1800கிலோ கைப்பற்றபட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *