டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட தேசிய மாணவர் படை மாணவி பா. சுபித்ரா

தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு , புதுச்சேரி&அந்தமான் நிக்கோபார் இயக்குனரகமாக சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து கல்லூரி, பள்ளிகள் அளவில் தேசிய மாணவர் படை மாணவா்கள் ஆண்டு தோறும் டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பு முகாமிற்கு தோ்வு செய்யப்படுகின்றனர்.
இதில் பள்ளி அளவில் 9 மாணவர்களும் 6 மாணவிகளும் தோ்வு செய்யப்பட்டு டெல்லியில் நாளை 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வாா்கள்.
அதனபடி இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 6 மாணவிகளில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப் பள்ளியின் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி பா.சுபித்ராதேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இவர் 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு முகாமிற்கு தோ்வு செய்யப்பட்டு செல்லி சென்று இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய மாணவர் படையின் 29 வது தரைப்படை தனிப்பிரிவில் இருந்து பள்ளி அளவில் முதல் முதலாக செல்லும் மாணவி பா. சுபித்ரா என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை மாணவியை தேசிய மாணவர் படை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் நிர்வாக குழு அனைத்து பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
