கோவில்பட்டியில் எலும்புமுறிவு, தோல்நோய், பொது மருத்துவம் இலவச சிகிச்சை முகாம்; முன்பதிவு செய்து பயன் பெறுங்கள்

 கோவில்பட்டியில் எலும்புமுறிவு, தோல்நோய், பொது மருத்துவம் இலவச சிகிச்சை முகாம்; முன்பதிவு செய்து பயன் பெறுங்கள்

டாக்டர்கள் கோபி குமாரசாமி , அக்னீஸ் வர்ஷினி, சரண்யா.

கோவில்பட்டி ஜி ஸ்டார் மருத்துவமனை நடத்தும் எலும்புமுறிவு, தோல் நோய், பொது மருத்துவம் இலவச சிகிச்சை முகாம் நாளை மறுநாள் 29-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

மெயின்ரோட்டில் லட்சுமி மில் குவார்ட்டர்ஸ் எதிர்புறம் ஜெகஜோதி காம்ப்ளக்சில் உள்ள ஜி ஸ்டார் மருத்துவமனையில் நடக்கும் இந்த முகாமில் எலும்பு முறிவு, மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோபி குமாரசாமி சிகிச்சை அளிக்கிறார்.

அவர், எலும்புமுறிவு, மூட்டு தேய்மானம், தண்டுவடம் மற்றும் இடுப்பு வலி தொடர்பான ஆலோசனைகள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகள் , சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதபுண் சிகிச்சை போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

தோல் நோய் மற்றும் அழகியல் நிபுணர் டாக்டர் அக்னீஸ் வர்ஷினி, தோல், முடி மற்றும் நகம் பிரச்சினைகள், முகப்பரு, முகப்பருவினால் உண்டாகும் தழும்பு, கரும்புள்ளிகள், சொரியாசிஸ், எக்சீமா, மங்கு மற்றும் இதர கரும்புள்ளிகள், முடி உதிர்தல், புழுவெட்டு, படர் தாமரை போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

பொதுநல மருத்துவர் சரண்யா, காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சுவாச பிரச்சினை, ரத்த சோகை போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கிறார்.

இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர் 73052 00201 மற்றும்  04632- 223355 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *