சித்தர்கள் வணங்கும் ஸ்ரீபாலாம்பிகை
ஸ்ரீவித்யை ஸ்ரீபாலா மார்க்கத்தை குரு முகமாகவே அடைய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஸ்ரீவாலை ஞான பூஜையின் மகத்துவத்தை போகர் அவருடைய குரு நந்தீசரிடம் இருந்து அறிந்து கொண்டதாக சொல்கிறார்.
போகர் வாலையின் மகத்துவத்தை கொங்கணர்க்கு சொன்னதாகவும், கொங்கணரும் அவர்தம் சீடர்களுக்கு வாலை பூஜையை விளக்கியதாகவும் சொல்கிறார்.
இவர்கள் எல்லோருடைய தெய்வமும் அன்னை ஸ்ரீ வாலைதான் ஆவாள். சித்தர்களின் மேலான தெய்வம் வாலைதான் என்பதையும் உறுதிப்படுத்துகிறார்.
ஸ்ரீபாலாம்பிகையின் தரிசனம் கிடைப்பது அற்புதத்திலும் அற்புதம். அன்பர்களுக்கெல்லாம் ஞானிகளை குருவாக தந்து, அவர்கள் அருகிலே தானும் அமர்ந்து அருள் பாலிப்பது ஸ்ரீபாலாவின் லீலா வினோதம் தான்.
பாலா ஷடாக்ஷரி மூலமந்திரம் :ஓம் ஐம் க்லீம் சௌம்
திரியட்சரி மூல மந்திரம் :சௌம் க்லீம் ஐம்
பாலா நவாட்சரி மூல மந்திரம் :ஓம் ஐம் க்லீம் சௌம், சௌம் க்லீம் ஐம், ஐம் க்லீம் சௌம்
பாலா தியான மந்திரம் : அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா, வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா, இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா, நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா என்று அவளை தியானித்த உடனே குழந்தையாய் ஓடி வருபவள்.
பாலா திரிபுரசுந்தரியை அக கண்ணினாலே கண்டு தான் சித்தர்கள் பூஜித்தனர். கலியுகத்தின் ஒப்பற்ற சக்தி பாலாம்பிகை நாம் வாழுகின்ற இக்கலியுகத்தில் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகி வருகிறோம். நற்கதிக்கான வழி தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறோம்.
இந்த நரக வாழ்வில் இருந்து விடுபட்டு நற்பேறு அடைய வழிக்காட்டுபவள் பாலாம்பிகையே ஆவாள். அவள் பாதம் பணிந்து சரணாகதி அடைந்து எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வோம்.
ஓம் ஐம் க்லீம் சௌம்
ஸ்ரீபாலா திரிபுரசுந்தர்யை நமோ நம;