• November 1, 2024

நீர்‌ வழிப்பாதையை ஆக்கிரமித்து‌ காற்றாலை நிறுவனத்தின் மின்கம்பங்கள்; கோட்டாட்சியரிடம் தேமுதிக புகார்

 நீர்‌ வழிப்பாதையை ஆக்கிரமித்து‌ காற்றாலை நிறுவனத்தின் மின்கம்பங்கள்; கோட்டாட்சியரிடம் தேமுதிக புகார்

கொவிலப்ட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியை தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

எட்டயாபுரம்‌ தாலுகா மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புலிவாடுநாயக்கன்பட்டி கிராமத்தில்‌ வசிப்பவர்கள்‌ விவசாயம்‌ செய்ய செல்லும்‌ வழியில் உள்ள நிலம் நீர்‌ வழி ஓடை மற்றும்‌ மாட்டு வண்டிப்பாதைகளை ஆக்கிரமித்து ஒரு காற்றாலை நிறுவனம் தற்போது ஒப்பந்ததாரர்கள்‌ மூலமாக இரட்டைமின்‌ கம்பங்கள்‌ மற்றும்‌ ஒற்றை மின்‌ கம்பங்கள்‌ நீர்‌ வழி ஓடையின்‌ நடுப்பகுதியில்‌ நிறுவி இருக்கிறார்கள்‌.

\இதனை கிராம மக்கள்‌ பல தடைவை முறையிட்டும்‌ சம்பந்த பட்ட ஒப்பந்ததாரர்கள்‌ செவி சாய்க்கவில்லை இதனால்‌ விவசாயம்‌ செய்ய செல்லவிடாமல்‌ தடுக்கும்‌ சூழ்நிலை உருவாகிறது. ஆதலால்‌ தாங்கள்‌ முன்வந்து சம்பந்த பட்ட நிறுவனத்தின்‌ மீதும்‌ ஒப்பந்ததாரர்கள்‌ மீதும்‌ நடவடிக்கை எடுத்து மின்‌ கம்பங்களை அகற்றி விவசாயத்தை வாழ வழிவிடுமாறு தங்களை மிக தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *