கோவில்பட்டி அருகே அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 31 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நிகழ்ச்சி
![கோவில்பட்டி அருகே அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 31 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நிகழ்ச்சி](https://tn96news.com/wp-content/uploads/2024/08/b4c7e0bf-b934-4c9b-9ea0-43be9b76a2ce-850x560.jpeg)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காளாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1989 – 1993 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் நம்ம ஊர் நம்ம ஸ்கூல் திட்டத்தின் கீழ் ரூ 4 லட்ம்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய நவீன கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை முன்னாள் மாணவர் ரவி வரவேற்றார். காளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியசாமி தலைமை உரையாற்றினார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2024/08/f8181e34-5b05-4344-9bf1-0b7da6a389a4-1024x576.jpeg)
விழாவில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி கலந்துகொண்டு புதிய கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் பாராட்டி கௌரவித்தனர். விழாவின் இறுதியில் முன்னாள் மாணவி கவுரி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற காலத்தில் தாங்கள் சாப்பிட்ட பண்டங்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.
இன்றைய தலைமுறையினர் அதனை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.
அதுமட்டுமின்றி 31 ஆண்டுகள் கழித்து தங்களது நண்பர்களை பார்த்த முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் தற்போது அவர்கள் குடும்ப நிலவரம் பற்றியும் கலகலப்புடன் பேசி நேரம் செலவழித்தனர். இந்த சந்திப்பு காட்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இறுதியில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து குழு படம் எடுத்துக் கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)