அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு-சான்றிதழ்
![அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு-சான்றிதழ்](https://tn96news.com/wp-content/uploads/2024/08/df5bc045-b4d8-4651-93a1-45a5a6568cd3-850x560.jpeg)
கோவில்பட்டி லயன்ஸ் கிளப் ஆப் டெம்பிள் சிட்டி சார்பில் சிதம்பரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேசிய கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது.10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன,
விழாவில் லயன்ஸ் கிளப் ஆப் டெம்பிள் சிட்டி தலைவர் முருகேஷ், செயலர் கண்ணன், பொருளாளர் பாலாஜி, பட்டைய தலைவர் ஜி.முருகேசன், ,முன்னாள் தலைவர் ஜி.எம்.துரைப்பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)