• March 6, 2026

அதிக மதிப்பெண் பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு; சிவகுமார் வழங்கினார்

 அதிக மதிப்பெண் பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு; சிவகுமார் வழங்கினார்

நடிகர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 44 ஆண்டுகளாக, பிளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கவுரவித்து வருகிறார். அதன்படி அறக்கட்டளை’யின் 45-ம் ஆண்டு நிகழ்ச்சி , சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்றது.

விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2,50,000/- (இரண்டு லட்சத்து  ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழை மாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், மூத்த ஓவிய கலைஞர் மாயா (G.R.மகாதேவன்) அவர்களுக்கு ரூ 1 லட்சம் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் கே. கம்மாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் பெண் கல்வி குறித்த அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி கிளையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். சங்கர் அர்பணிப்பு மிக்க பணிகளுக்காகவும் கவுரவிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்குப பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார்,.

நடிகர் சிவகுமார், பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா, நடிகர்  கார்த்தி ,பேராசிரியர் கல்யாணி, முனைவர் விஜய அசோகன்,ஆகியோர் பேசினார்கள்.

சென்னை ஆல்பா கலை அறிவியல் கல்லூரி மாணவர் சக்திவேல், எஸ்.ஆர்.எம். பல்கலைகழக மாணவி  விஜயலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கினர். எம்.ஜி.ஆர். மகளிர் கல்லூரி மாணவி  மகாலட்சுமி நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *