கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் 54 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டை; ஆரம்பகட்ட பணிகள் தீவிரம்

கோவில்பட்டி திட்டங்குளம் பகுதியில் ஏற்கனவே தமிழக அரசின் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டியில் சுமார் 54 ஏக்கரில் ரூ.25 கோடி திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து தற்போது லிங்கம்பட்டியில் சிட்கோ சார்பில் புதிய தொழிற்பேட்டை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தொழிற்பேட்டை நுழைவு பகுதியில் வரவேற்பு வளைவு வைக்கப்பட்டு உள்ளது.
வரவேற்பு வளைவில். சிட்கோ தொழிற்பேட்டை லிங்கம்பட்டி -உங்களை அன்புடன் வரவேற்கிறதுஎன்று ஆங்கிலம் மற்றும் தமிழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து இந்த பகுதியில் தொழிற்பேட்டைக்குரிய இடம் சர்வே செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தொழிற்பேட்டை வளாகத்தில் ஆலைகள் நிறுவ இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லிங்கம்பட்டியில் புதிய தொழிற்பேட்டை வருகை காரணமாக இந்த பகுதி வேகமான வளர்ச்சியை பெறும் என்ற நம்பிக்கை இந்த பகுதியினருக்கு ஏற்பட்டு உள்ளது.
