பா.ஜனதா சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம்
கோவில்பட்டியில் எட்டையபுரம்ரோட்டில் உள்ள சிவா திருமண மண்டபத்தில் டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாள் கருத்தரங்கம் நிகழ்ச்சி மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் நடைபெற்றது
பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி பொதுச் செயலாளர் வேல் ராஜா கிஷோர் குமார் துணைத் தலைவர் ராஜேந்திரன் பட்டியல்அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை ஒன்றிய தலைவர்கள் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவின்போது அம்பேத்கர் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து ,பொன் தாமரை செய்தித்தாள் இலவச முதல் பிரதியை மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் இரண்டாம் பிரதியை மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி மூன்றாம் பிரதியை மாநில பொதுச் செயலாளர் பட்டியல் அணி சிவந்தி நாராயணன் ஆகியோருக்கு வழங்கினார்.
.ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் ராஜகாந்தன் , கிழக்கு ஒன்றிய ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்