18 வயதுக்குட்பட்டோருக்கான தென் மண்டல ஆக்கி; தமிழக ஆண்கள் அணி தங்கம் வென்றது- பெண்கள் அணிக்கு வெள்ளிப்பதக்கம்

ஆக்கி இந்தியாவின் 18 வயதுக்குட்பட்டோருக்கான கிராஸ் ரூட் தென் மண்டல அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி ராமநாதபுரம் வேலுமாணிக்கம் செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் மார்ச் 19 முதல் 26 வரை நடைபெற்றது
இதில் கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா புதுச்சேரி மற்றும் தமிழக அணிகள் கலந்து கொண்டு விளையாடின. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன இறுதிப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழகமும் கர்நாடகமும் விளையாட தகுதி பெற்றன
பெண்கள் பிரிவில் கர்நாடக மாநில அணி தமிழக அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றனர் தமிழக அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணி கர்நாடக அணியும் தலா இரண்டு கோல்கள் அடித்து சமநிலையில் முடிவு பெற்றன இறுதியில் சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு 5-4 என்ற கோல் கணக்கில் சூட் அவுட் முறையில் வெற்றி பெற்றது போட்டியின் முடிவில் 7-6 என்ற கோல் கணக்கில் தமிழக அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது
தமிழக அணியில் கோவில்பட்டி வீரர்கள் ராமநாதன் வேல் ராகவன் இன்பராஜ் சுகுமார் மற்றும் தமிழக அணி பயிற்சியாளராக கோவில்பட்டி பயிற்சியாளர் அரபிந்தன் செயல்பட்டு தமிழக அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தனர்/

பெண்கள் பிரிவில் தமிழக அணி சார்பாக மணிமொழி மற்றும் ஹரீதா இருவரும் விளையாடினர் தங்கப்பதக்கம் பெற்ற ஆண்கள் அணி வீரர்களையும் வெள்ளி பதக்கம் பெற்ற பெண்கள் அணி வீராங்கனைகளையும் ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமைநாயகம் செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்துபாண்டியராஜா முதுநிலை துணைத்தலைவர் நாகமுத்து, துணைத்தலைவர்கள் மணிமாறன், உமாசங்கர், அழகுதுரை, ஜார்ஜ் ஈஸ்டர், துணைச் செயலாளர்கள் மாரியப்பன், சந்தானம், முருகன், வழக்கறிஞர் பெரியதுரை மற்றும் மூத்த வீரர்கள் வசந்த ராஜா, தெய்வபாலன், மனோகர், வினோ, சுரேஷ்குமார், அஸ்வின் , காளிதாஸ், வேல்முருகன், தங்கராஜ், சிவானந்தம் மற்றும் பலர் பாராட்டினர்
