தூத்துக்குடி நூலகத்தில் குரூப் 2 இலவச மாதிரி தேர்வு; பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்யலாம்
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் மா.ராம்சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கூறப்பட்டு இருப்பதாவது:-‘
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகமும் கோவில்பட்டி துளிர் I.A.S அகாடமியும் இணைந்து டூவிபுரம் 9வது தெருவில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் வரும் 15.2.2023 புதன்கிழமை மற்றும் 20.2.2023 திங்கள்கிழமை காலை 10. மணிக்கு TNPSC குரூப்-2 பிரதான தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடத்துகிறது.
இந்த இலவச மாதிரி தேர்வில் பங்குபெற விரும்புபவர்கள் 9444206805, 9444206905 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.
தேர்வு நடைபெறும் இடம் “மாவட்ட மைய நூலகம், டூவிபுரம் 9வது தெரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் தூத்துக்குடி – 628003”
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







