தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் பூர்த்தி செய்து தருகின்ற அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த அலுவலகம் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும், எனவே பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அலுவலக திறப்பு விழாவில் கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர் […]
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது. செப்டம்பர் 11- ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு […]
தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை ராயபுரம் வரை இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கான பார்சல்களை ஏற்றுவதற்கு ஒதுக்கப்படும் ஒரு பெட்டியில் சுமார் 23 டன் பார்சல்கள் ஏற்றி செல்ல முடியும். வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும். இந்த ரெயில் மங்களூருவில் இருந்து டிசம்பர் 12-ம் […]
தூத்துக்குடியைச் சார்ந்த சதீஷ்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் லாரி வாங்க கடன் கேட்டுள்ளார். கடன் வழங்கிய நிறுவனம் அந்த லாரிக்கு காப்பீடு செய்வதற்காக புகார்தாரரிடம் பணம் பெற்றுள்ளது. ஆனால் புகார்தாரரினால் லாரியின் பின் பகுதியான டேங்க் வாங்க முடியாமல் போய் விட்டது. இதனால் காப்பீட்டிற்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தர மறுத்துள்ளது. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து […]
தூத்துக்குடியில் தென் மாவட்ட முட்டை விற்பனையாளர் நலச்சங்க கூட்டம் மாநில தலைவர் செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் வரலாறு காணாத அளவு முட்டை விலை உயர்ந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் நாமக்கல்லில் இருந்து செயல்படும் பண்ணை உரிமையாளர்களே. அவர்கள் விலையை நிர்ணயம் செய்வதால் இந்த விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு முட்டை விலையை தினசரி நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் முட்டை விலை […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவலாளிகளாக அந்த பகுதியை சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது54), பேச்சிமுத்து (60) ஆகிய 2 பேர் பணியாற்றி வந்தனர். சம்பவத்தன்று நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து காவலாளிகள் 2 பேரையும் வெட்டிக்கொன்று உண்டியலை உடைத்து, வெள்ளி பொருட்களை சேதப்படுத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (25) என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். […]
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு மோடி வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் சுவாமிநாதன் பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா […]
சீர்மரபினர் பட்டியல் மக்களுக்கு டி.என்.டி.ஒற்றை சாதிச்சான்று வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக சீர்மரபினர் பட்டியல் மக்களுக்கு டி.என்.டி / டி.என்.சி. என்று இரட்டைச் சான்று வழங்குவதை தவிர்த்து டி.என்.டி என்ற ஒற்றைச் சாதிசான்று வழங்க மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தியும், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை பிரமலைக் கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் ஜி கலந்து கொண்டு […]
ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுவதாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகி உள்ளது.இந்த கால அட்டவணைப்படி, இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கும், சிவகங்கையில் இருந்து மாலை 4.10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து மாலை 4.40 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து மாலை […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் படித்து பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருவர்களில் கோயம்புத்தூர், பிஎன் புதூர் சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23), திருப்பத்தூர் மந்தவெளி குறும்பேறியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முகிலன் (23), தூத்துக்குடி தெர்மல் நகர் ரவிக்குமார் மகன் கிறிஸ்டிகுமார் (23) மற்றும் சரண் (23) ஆகிய 5பேர் இன்று அதிகாலை 3 மணி அளவில் காரில் புதிய துறைமுகம் கடற்கரைக்கு சென்றனர். […]







