கோவில்பட்டி முத்து நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 74). இவர் சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும் 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர். முனிராஜ் மனைவியுடன் கோவில்பட்டி முத்துநகர் பல்லாக்கு ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் முனிராஜ் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் வசிக்கும் மகனை பார்க்க சென்றார். அந்த சமயத்தில் அவரது […]
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று கோவை மாவட்டம் நீலம்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சமீபத்தில் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;- “தமிழகத்தின் பொருளாதார ஆற்றல் காரணமாக, மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம். பொருளாதாரத்தில் மற்ற மாநிலங்களை விட நாம் முன்னிலையில் இருக்கிறோம். சென்னை, கோவை உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பயங்கரவாதிகளை ஈர்க்கும் இலக்குகளாக இருக்கும். இந்த […]
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தாள் -1 தேர்வும் பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள்-2. தேர்வும் நடத்த அறிவிக்கப்பட்டது. தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. நவம்பர் 1 மற்றும் 2-ந்தேதி நடை பெறுவதாக இத்தேர்வு அறிவிக்கப்பட்டது. கல்லறை திருநாள் என்பதால் இதனை வருகிற 15 மற்றும் 16-ந்தேதி நடத்தப்படும் […]
தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ள ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான உலகக் கோப்பை அறிமுக விழா கோவில்பட்டியில் இன்று நடந்தது. இந்தியா அர்ஜென்டினா சீனா நியூசிலாந்து பிரான்ஸ் ஆஸ்திரேலியா ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் கலந்து கொள்ளும் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி போட்டிகள்வருகிற .28-ம் தேதி முதல் டிசம்பர் .10-ம் தேதி வரை தமிழகத்தில் சென்னை, மதுரையில் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சர்வதேச […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாத உண்டியல்கள் எண்ணும் பணி செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது. தக்கார் அருள்முருகன் தலைமை தாங்கி , உண்டியல் எண்ணும் பணியை பார்வையிட்டார். இணை ஆணையர் ராமு முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், நாகவேல், கண்காணிப்பாளர் கோமதி, ஆய்வர் செந்தில்நாயகி, தக்காரின் நேர்முக உதவியாளர் […]
மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட […]
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புடைய […]
எஸ்ஐஆர் படிவம் நிரப்புவது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யும் முறை.. 1) வலது பக்க மேல் மூலையில் புதிய புகைப்படம் ஒட்ட வேண்டும் 2) வாக்காளரின் விபரம், பெற்றோர் மற்றும்&
தூத்துக்குடி மாவட்டத்தில் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்காகவும், திரும்ப பெறுவதற்காகவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம்-2026 ஆனது 1-1-2026 ஐ தகுதிநாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. இதில், முதற்கட்டமாக வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணி 04-11-2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 11-11-2025 மாலை 4 […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக கூட்டுறவு பிரிவு பொறுப்பாளர்கள் நியமனம்; அம்மன் மாரிமுத்து
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக கூட்டுறவு பிரிவு தலைவர் அம்மன் எஸ். மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.MLA, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் .கேசவவிநாயகம் ஜி, கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோர் வழிகாட்டுதலின்படியும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் கு.சரவணகிருஷ்ணன் ஒப்புதலோடு. தூத்துக்குடி வடக்கு மாவட்ட கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர்.அம்மன்.மாரிமுத்து ஆகிய நான்.கீழ்கண்ட நிர்வாகிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கூட்டுறவு பிரிவு மாவட்ட பொறுப்பாளர்களாக இன்று முதல் […]







