ஜூனியர் ஆண்கள் ஆக்கி உலகக்கோப்பை; கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. அறிமுகம்


தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ள ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான உலகக் கோப்பை அறிமுக விழா கோவில்பட்டியில் இன்று நடந்தது.
இந்தியா அர்ஜென்டினா சீனா நியூசிலாந்து பிரான்ஸ் ஆஸ்திரேலியா ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் கலந்து கொள்ளும் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி போட்டிகள்வருகிற .28-ம் தேதி முதல் டிசம்பர் .10-ம் தேதி வரை தமிழகத்தில் சென்னை, மதுரையில் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் நடைபெற உள்ள. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான உலகக் கோப்பை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகம் செய்வதற்கான வாகனக் குழு பயணம் நடந்து வருகிறது.
ஜூனியர் ஆண்கள் ஆக்கி உலகக் கோப்பை திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் அறிமுக விழா நடந்தது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்று ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்),தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சார் ஆட்சியர், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், திமுக ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,ஜெயகண்ணன், திமுக கிழக்கு நகர பொறுப்பாளர் சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் மாதேஸ்வரன், குருராஜ், தகவல் தொழில் நுட்ப அணி பழனிக்குமார், மாவட்ட மாணவரணி ஆகாஷ் பாண்டியன், காங்கிரஸ் கட்சி நகரத்தலைவர் அருண்பாண்டியன் மற்றும் ஆக்கி வீரர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பயிற்சி மேட்டில் கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆக்கி மட்டை கொண்டு விளையாடி வாழ்த்தினர். தொடர்ந்து, கோவில்பட்டியைச் சேர்ந்த இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் ஜெகன் செந்தில், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆக்கி விளையாட்டு விடுதி வீரர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையை சுமந்தபடி செயற்கை புல்வெளி மைதானத்தை சுற்றி வந்தனர்.

ஏற்கனவே ஆக்கி விளையாட்டுக்கு பெயர் பெற்ற கோவில்பட்டிக்கு ஜூனியர் உலகக்கோப்பை கொண்டுவரப்பட்டது ஆக்கி வீரர் மற்றும் வீராங்கனைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.







