சென்னை-தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரெயில்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சென்னை- தூத்துக்குடி இடையே பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் சென்னைக்கும், தூத்துக்குடிக்கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி எம்,.பி.யுமான கனிமொழி வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் கனிமொழி பேசியதாவது;- ,சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தினை எதிர்கொள்ள, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் புதிய […]