கோவில்பட்டியில் துரை வைகோ எம். பி. பிறந்தநாள் விழா


கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம் பி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி ராஜீவ் நகர் நீடிய வாழ்வு ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி,மதிய உணவு வழங்கினர். தொடர்ந்து அங்குள்ள 90 முதியோர்களுக்கு ஆடைகள், பெட்ஷீட் ஆகியவை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ்,மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக துணை பொதுச்செயலாளர் தி மு ராஜேந்திரன் கலந்து கொண்டு கேக் வெட்டி, நலத்திட்டங்கள் மற்றும் மதிய உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் கணேசன்,மாநில தீர்மானக்குழு உறுப்பினர் முத்துச்செல்வம்,மாவட்டத் துணைச் செயலாளர் தெய்வேந்திரன்,மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கொம்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


