இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் சார்பாக கோவில்பட்டியில் உலக புத்தக தினம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய கலாச்சார நட்புறவுக்கழக மாநில செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். உலக புத்தகதினம் குறித்தும், புத்தக வாசிப்பை இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் க.கருத்தப்பாண்டி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் […]
கோவில்பட்டி இளையரசேனந்தல் ரோடு ஏஐ டி யு சி சுமைதூக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் புதிய கிளை தொடக்க விழா கூட்டம் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் பரமராஜ்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் சரோஜா,நகர துணைச்செயலாளர் முனியசாமி ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி பேசினார்கள். ஏஐடியுசி சுமைதூக்கும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படடனர். சங்க தலைவராக வள்ளிராஜ், செயலாளராக முனியசாமி, பொருளாளராக […]
மதர் சமூக சேவை நிறுவனம் ஆண்டு தோறும் பூமி பாதுகாப்பு தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி(இன்று ) பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார்.காயல்பட்டிணம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ப. கைலாச […]
கோவில்பட்டி சொர்ணா தொழில் பயிற்சி நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், ஆட்டோமொபைல்,ஏசி மெக்கானிக் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டு அதில் 29 மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பயிற்சி நிறுவனத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார். பயிற்சி நிறுவன முதல்வர் சாந்தி பிரியா, ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் […]
கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக கோடைகால ஆக்கி பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார். மொத்தம் 40 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 27 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் கோடை காலங்களில் இலவச ஆக்கி பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. 14 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறும் அனுபவமுள்ள மூத்த வீரர்கள் பயிற்சி […]
கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன்(வயது 70). இவர் திருமண மண்டபத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று புதுக்கிராமத்தில் உள்ள 192வது நம்பர் வாக்கு சாவடி மையத்தில் அரசு கொடுத்த பூத் சிலிப் கொண்டு வந்து கொடுத்து தனது வாக்கினை செலுத்த சென்றார். அங்கிருந்த தேர்தல் அதிகாரி ஆவணங்களை பார்த்து விட்டு நீங்கள் நீங்கள் இறந்து விட்டதாக வாக்காளர் பட்டியலில் உள்ளது. எனவே நீங்கள் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த […]
நாடாளுமன்ற மக்களவை முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். இன்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பான ஓட்டு பதிவு நடைபெற்றது. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம்(தனி ), கோவில்பட்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் உள்ள வாக்குசாவடிகளில் 288 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. […]
தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தென்னைகள் திரை உலகினர் மிகுந்த ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். நடிகர் அஜித்குமார் ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடி மையத்துக்கு வந்து விட்டார்.ஓட்டு பதிவு தொடங்கும் வரை காத்திருந்து முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவ கார்த்திகேயன், கவுதம் கார்த்திக், விஷால்,சரத்குமார், ஆரி,சிவக்குமார், கார்த்திக், சந்தானம், மனோஜ்,நாசர்,சிபி, இயக்குனர்கள் பாரதி […]
சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி , அவரது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து வாக்களித்தார். அப்போது கனிமொழியுடன் வாக்காளர்கள் பலரும் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழிகூறியதாவது :- இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய, அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். எனவே, அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அந்தத் தெளிவுடன், […]
நாடாளுமன்ற மக்களவை முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். இன்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பான ஓட்டு பதிவு நடைபெற்றது.அமைச்சர் கீதா ஜீவன் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் . தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தனது குடும்பத்துடன் போல் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜய […]