• May 2, 2024

தூத்துக்குடி உள்பட 39 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு விவரம் 

 தூத்துக்குடி உள்பட 39 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு விவரம் 

 நாடாளுமன்ற மக்களவை முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். இன்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பான ஓட்டு பதிவு நடைபெற்றது. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம்(தனி ), கோவில்பட்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் உள்ள வாக்குசாவடிகளில் 288 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 

ஆண்கள் 7,08,244 பேர். பெண்கள் 7,39,720 பேர். மூன்றாம் பாலினத்தோர் 215பேர் ஆவர்.

இன்று தூத்துக்குடி தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்கப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு பின்னர் விரைவாக சரி செய்யப்பட்டது. பெரிய அளவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. மக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வாக்களித்து சென்றனர். 

 காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

 தமிழ்நாட்டில் தூத்துக்குடி உள்பட 39 மக்களவைத் தொகுதிகளில் இரவு 7 மணி வரை மொத்தம் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம் வருமாறு

கள்ளக்குறிச்சி – 75.64, 

தருமபுரி 75.44 சதவீதம் 

ஆரணி- 73.77

கரூர் – 74.05

பெரம்பலூர்- 74.46

சேலம்- 74.55

சிதம்பரம்- 74.87

விழுப்புரம்- 73.49

ஈரோடு- 71.42

அரக்கோணம்- 73.92

திருவண்ணாமலை- 73.35

விருதுநகர்- 72.99

திண்டுக்கல்- 71.37

கிருஷ்ணகிரி- 72.96

வேலூர்- 73.04

பொள்ளாச்சி- 72.22

நாகப்பட்டினம்- 72.21

தேனி- 71.74

நீலகிரி- 71.07

கடலூர்- 72.40

தஞ்சாவூர்- 69.82

மயிலாடுதுறை- 71.45

சிவகங்கை- 71.05

தென்காசி- 71.06

ராமநாதபுரம்- 71.05

கன்னியாகுமரி- 70.15

திருப்பூர்- 72.02

திருச்சி- 71.20

தூத்துக்குடி- 70.93

கோவை- 71.17

காஞ்சிபுரம்- 72.99

திருவள்ளூர்- 71.87

திருநெல்வேலி- 70.46

மதுரை- 68.98

ஸ்ரீபெரும்புதூர்- 69.79

சென்னை வடக்கு- 69.26

சென்னை தெற்கு- 67.82

சென்னை மத்தி- 67.35

ஒவ்வொரு தொகுதி  வாக்குசாவடி மையங்களில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்கப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு,ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பாடடான.

தூத்துக்குடி மக்களவை தொகுதி வாக்குச்சாவடிகள் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு பாதுகாப்பான் அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான லட்சுமிபதி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

 தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபட்டனர். கல்லூரி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *