கோவில்பட்டியில் வாக்களிக்க சென்றவரை இறந்து விட்டதாக கூறிய அதிகாரி – திடீர் பரபரப்பு
![கோவில்பட்டியில் வாக்களிக்க சென்றவரை இறந்து விட்டதாக கூறிய அதிகாரி – திடீர் பரபரப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/04/votekvp_1713525519.jpg)
கோவில்பட்டி சிந்தாமணி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன்(வயது 70). இவர் திருமண மண்டபத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று புதுக்கிராமத்தில் உள்ள 192வது நம்பர் வாக்கு சாவடி மையத்தில் அரசு கொடுத்த பூத் சிலிப் கொண்டு வந்து கொடுத்து தனது வாக்கினை செலுத்த சென்றார்.
அங்கிருந்த தேர்தல் அதிகாரி ஆவணங்களை பார்த்து விட்டு நீங்கள் நீங்கள் இறந்து விட்டதாக வாக்காளர் பட்டியலில் உள்ளது. எனவே நீங்கள் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருதப்பன் அரசு ஓட்டளிக்க பூத் சிலிப் வழங்கி உள்ளது. எப்படி நான் இறந்துவிட்டதாக கூறுகிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
.இதனால் அந்த சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து தேர்தல் அதிகாரி கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாளை தொடர்பு கொண்டு பிரச்சினையை எடுத்து கூறினார். இதனை கேட்டு மருதப்பனை தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்கலாம் என்று தாசில்தார் கூறியதை தொடர்ந்து ஒரு விண்ணப்பத்தில் மருதப்பனிடம் அவரது கைரேகை மற்றும் கையெழுத்து பெற்ற பின்னர் அவரை ஓட்டளிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்.
‘
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)