• May 3, 2024

பூமி பாதுகாப்பு தினத்தில் மரக்கன்றுகள் நடும்பணி 

 பூமி பாதுகாப்பு தினத்தில் மரக்கன்றுகள் நடும்பணி 

   மதர் சமூக சேவை நிறுவனம் ஆண்டு தோறும் பூமி பாதுகாப்பு தினத்தில்  விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி(இன்று )  பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு    காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு  மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார்.காயல்பட்டிணம் நகராட்சி சுகாதார ஆய்வாளர்  ப. கைலாச சுந்தரம், காயல் இயற்கை வளம் அமைப்பின் செயலாளர் ஜாகீர், க கிராம நிர்வாக அலுவலர் ஜி வேல் ஜோதிஆகியோர் முன்னிலை வகித்தனர் .

 சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையாளர் பா.குமார் சிங்  கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும்பணியை தொடங்கி வைத்தார்.  

காற்றை மாசுபடுத்தும் செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும். காற்றை தூய்மைப்படுத்தும் காடு வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஓசோன் படலம் மெலிந்து அதில் துளை ஏற்படும் அபாயத்தை பாதிக்கக்கூடிய ரசாயன பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பகுத்தறிவு கொண்ட மனிதர்கள் நமக்கு கிடைத்துள்ள இந்த பூமியை பாதுகாக்க முன்வர வேண்டும். ஆனால் மக்கள் இதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். இது தடுப்பதற்கு சட்டம் கொண்டுவர வேண்டும் ‌. பூமியின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. மரங்களை வளர்த்து பூமியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  

நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் மு கணேஷ். மதர் சமூக சேவை நிறுவன அலுவலர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி அனைவரையும் வரவேற்றார். முடிவில் சமூக ஆர்வலர் காயல். பாலா நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *