• May 17, 2024

புவி வெப்பமயமாதலை தடுத்திட நாகம்பட்டி கல்லூரி பேராசிரியர்கள் உறுதி மொழி

 புவி வெப்பமயமாதலை தடுத்திட நாகம்பட்டி கல்லூரி பேராசிரியர்கள் உறுதி மொழி

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர்கள் புவி வெப்பமயமாதலைத் தடுத்திட உறுதி மொழியேற்பு  நடைபெற்றது.

இயந்திரமயமாதலின் காரணமாக பூமி நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலையிலும், விவசாயம் விளிம்பு நிலையிலும் மற்றும் கடலோர நகரங்கள் மூழ்கும் அபாயத்திலும் உள்ளன.

 இளையதலை முறையினருக்கு நல்ல ஆரோக்கியமான புவியை உருவாக்கி கொடுத்தல் நம் கடமையாகும். ஆகையால், இப்புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு பேராசிரியர்களாகிய நாங்கள், ஒவ்வொரு ஆண்டின் இறுதி வேலை நாளன்று, ஆளுக்கொரு மரம் நட்டு, அதைத் தம் குழந்தைகள் போல பராமரித்து வளர்த்திடுவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதைப்போன்று அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென்று விரும்புகின்றோம் என்று கூறினர். 

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் இரா. சேதுராமன் தலைமை தாங்கினார். அனைத்து துறைப் பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் மரங்களை நட்டனர். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் முனைவர் செ. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *