• May 2, 2024

அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் வாக்களித்தார்

 அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் வாக்களித்தார்

 நாடாளுமன்ற மக்களவை முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். இன்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பான ஓட்டு பதிவு  நடைபெற்றது.அமைச்சர் கீதா ஜீவன் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் .

தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தனது குடும்பத்துடன் போல் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜய சீலன் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார்

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, ராமச்சந்திராபுரத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வாக்காளித்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பூர் சிதம்பராபுரம் இந்து தொடக்கப் பள்ளி வாக்கு சாவடியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ வாக்களித்தார்.

கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் நகர் மன்ற தலைவர் கருணாநிதி தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதிகாரிகளுடன் மேயர் வாக்குவாதம் 

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள தங்கம்மாள்புரம் நினைவு மேல்நிலைப் பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி தனது வாக்கினை பதிவு செய்ய வந்திருந்தார். 

அப்போது, அதிமுக வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் ஒருவர் அதிமுக வேட்பாளரின் முகம் மற்றும் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை வைத்திருந்துள்ளார்.

இதனைக் கண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, உடனடியாக தேர்தல் பணிகளில் இருந்த அதிகாரிகளிடம் கூறி அதை அப்புறப்படுத்துமாறு கூறினார். அதன் பின்னர் தேர்தல் அதிகாரி பூத் ஏஜென்ட் வைத்திருந்த மாதிரி வாக்குப்பதிவு அட்டவணையை கைப்பற்றி அப்புறப்படுத்தினர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *