கோவில்பட்டியில் உலக புத்தக தினம் கொண்டாட்டம்
இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் சார்பாக கோவில்பட்டியில் உலக புத்தக தினம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய கலாச்சார நட்புறவுக்கழக மாநில செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்.
உலக புத்தகதினம் குறித்தும், புத்தக வாசிப்பை இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் க.கருத்தப்பாண்டி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், ரமேஷ், ஒய். எம். சி. ஏ.தலைவர் ஆம்ஸ்ட்ராங், உரத்த சிந்தனை சிவானந்தம், பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை காளிதாஸ், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், தமிழ் நாடு பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மேரிஷீலா, தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.