• May 16, 2024

Month: July 2022

கோவில்பட்டி

தம்பதி கொலையில் உருக்கம் :போலீஸ் எச்சரித்தும் பெற்றோரை சமாதானம் செய்ய வந்த புதுப்பெண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியின் மகள் ரேஷ்மா (19), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (28). வெளிநாட்டில் வேலை பார்த்த மாணிக்கராஜ் ஊருக்கு திரும்பி கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.மேலும் முத்துக்குட்டி, மாணிக்கராஜ்க்கு மாமா முறை என்று கூறப்படுகிறது. மாணிக்கராஜ்- ரேஷ்மா இருவரும் […]

தூத்துக்குடி

அச்சிட்ட காகிதங்களில் வடை, பஜ்ஜி: தூத்துக்குடியில் 6 கடைகளுக்கு தலா ரூ.1௦௦௦ அபராதம்

அச்சிட்ட காகிதங்களில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை வழங்கக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் 65 டீக்கடைகள் ஆய்வு செய்ததில், 14 கடைகளில் நியூஸ் பேப்பர்களில் வடை மற்றும் இதர உணவுப் பொருட்கள் நேரடியாக வழங்குவது கண்டறியப்பட்டது.இதை தொடர்ந்து நியமன அலுவலரிடத்தில் அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு அலுவலர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், […]

ஆன்மிகம்

சிவராத்திரியும்… பிரதோஷமும் இன்று …

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. ஆனால் ஆடி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி மிகவும் முக்கியமானது. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். மாத சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் இவர் அருள் மழை பொழியச் செய்வார் என்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது. பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி.யாக கே.வெங்கடேஷ் நியமனம்

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக(டி.எஸ்.பி.)இருந்த உதயசூரியன் இடமாற்றம் செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது, அவரது பணியிடத்துக்கு புதிதாக யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.கோவில்பட்டிக்கு புதிய டி.எஸ்.பி.நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து எழுப்பப்பட்டதுஇந்த நிலையில் கோவில்பட்டி புதிய டி.எஸ்.பி.யாக கே.வெங்கடேஷ் நியமிக்கபப்ட்டு இருக்கிறார். தற்போது விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் அவர் கோவில்பட்டிக்கு இடமாற்றம் செயப்பட்டு இருக்கிறார்.அவர் விரைவில் கோவில்பட்டி டி.எஸ்.பி.யாக் பொறுப்பு ஏற்க உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் நடந்தது

தூத்துக்குடி உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழாகடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கை முன்னிட்டு முற்றிலும் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல பனிமயமாதா பேராலய திருவிழா நடக்கிறது. தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஆகஸ்ட் 5ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை பங்கு தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் கொடிப்பவனி நடைபெற்றது.இன்று அதிகாலை காலை 4.30 மணிக்கு ஜெபமாலை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுரோடு இறக்கத்தில் பள்ளங்களை மூடும் கண்துடைப்பு பணி

கோவில்பட்டி நகரின் மிக முக்கியமான சாலையாக புதுரோடு கருதப்படுகிறது. இந்த பகுதி வழியாக தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும். புதுரோடு என்ற பெயருக்கு ஏற்றபடி இந்த சாலை இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு வாறுகால் அமைப்பதற்காக சாலையின் ஒரு பகுதியில் நகரசபை நிர்வாகத்தின் சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு பணி முழுமை அடையாமல் இருக்கும் நிலையில் மறுபுறத்தில் ஒரு இடத்தில் சாக்கடையை சாலைக்கு திருப்பி விட்டு இருக்கிறார்கள். இதனால் புதுரோடு […]

ஆன்மிகம்

ஏகலைவனிடம் குருதட்சனையாக கட்டை விரலை கேட்ட துரோணர்….

அவர் ஒரு ஆரிய பிராமண சூது பிடித்தவர் , இரக்கமில்லாதவர், பார்ப்பன கொடூரக்காரர் என ஏக குற்றசாட்டுகள் பகுத்தறிவு பேசுபவர்களிடம் இருந்து வரும். உண்மையில் நடந்தது என்ன..? அந்த துரோணரின் நிலை பரிதாபமானது.. ஆம், துரோணர் அந்த அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது. சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர். அந்நாளில் ராஜவம்சத்துக்கு மட்டுமே ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும், […]

கோவில்பட்டி

காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மகள் ரேஸ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்து வந்தார்.இவரது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து […]

கோவில்பட்டி

கடலையூர் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர்; கலெக்டரிடம் கோரிக்கை மனு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கடலையூர் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஏற்பாட்டில் மாநில இளைஞரணி துணை செயலாளர் குருஸ் திவாகர் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி முன்னிலையில், கிளைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சொரிமுத்து, ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரன், கிளைச் செயலாளர் […]

தூத்துக்குடி

மின் கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி, குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளில் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜூலை 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்படி இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் பாளை ரோடு வி.வி.டி. சிக்னல் அருகே மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]