டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள்: இலவச மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்
கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் டாக்டர் ராமதாஸ் பெயரில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் பின்புறம் அமைந்துள்ள காந்தி மைதானத்தில் மாவட்டசெயலாளர் ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றினார். பின்பு கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாடசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ், இளைஞர் அணி துணைச் செயலாளர் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி ,மாவட்ட துணைச் செயலாளர் ஐயப்பன் , கயத்தார் ஒன்றிய செயலாளர் முருகன் ,கிழக்கு ஒன்றிய செயலாளர் லெனின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.