கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் அரிக்கேன் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்

 கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் அரிக்கேன் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்

மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், கட்டண திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு , அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு ஆகியவற்றை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் அரிக்கேன் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை செயலாளர் சீனிராஜ், அ.தி.மு.க. நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைப்பாண்டியன், மகேஸ், அன்புராஜ், கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், வடக்கு மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளர் வேலுமணி, நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை,
எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், அவைத்தலைவர் அப்பாச்சாமி, கழகபபேச்சாளர் பெருமாள்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மாவட்ட பிரதிநிதிகள் மகேஷ்பாலா, முத்துலட்சுமி, வழக்கறிஞர் சங்க சங்கர் கணேஷ், மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகி சுதா, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ், அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் தேவேந்திரன், பாலமுருகன், பழனிக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *